Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாறிவரும் பாடத்திட்டங்கள் – அப்டேட் ஆன அமைச்சர் செங்கோட்டையன்

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (15:54 IST)
தமிழக பாட திட்டங்கள் மற்றும் பள்ளிக்கல்வி வசதிகளை மேம்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். நீட், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள், மாணவர்களுக்கு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது, மற்ற தனியார் பள்ளிகளை போல உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பாட்டு வசதிகளை அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏற்படுத்துவது போன்ற பல திட்டங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன்.

அதன்படி சென்ற ஆண்டே ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்புக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் தற்காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டன. கூடுதலாக இந்த வருடம் 2 முதல் 5 வகுப்புகள், ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஈரோட்டில் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் தமிழகமெங்கும் உள்ள 7000 பள்ளிகளில் 6வது முதல் 8வது வரை ஸ்மார்ட் க்ளாஸ் வகுப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும் இந்நேரத்தில் உள்ளாட்சி துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை இணைந்து மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments