Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினகரன் சட்டசபைக்குள் வரும்போது எடப்பாடி எழுந்து நிற்பார்: நாஞ்சில் சம்பத் அதிரடி!

Advertiesment
தினகரன் சட்டசபைக்குள் வரும்போது எடப்பாடி எழுந்து நிற்பார்: நாஞ்சில் சம்பத் அதிரடி!
, வெள்ளி, 5 ஜனவரி 2018 (12:45 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக வெற்றிபெற்றுள்ள டிடிவி தினகரன் வரும் 8-ஆம் தேதி தொடங்க உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் முதன்முதலாக பங்கேற்க உள்ளார்.
 
தினகரன் தனி ஒரு ஆளாக சட்டசபைக்குள் செல்ல இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட இருக்கிறது. தினகரனும் தான் சட்டசபையில் போசப்போவதை பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார்.
 
இதனால் ஆளும் தரப்பு சற்று கலக்கமடைந்துள்ளது. தினகரனை எப்படி சட்டசபையில் சமாளிப்பது என பல ஆலோசனைகளை அவர்கள் நடத்தியுள்ளனர். மேலும் தினகரன் சட்டசபைக்குள் வரும்போது அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தினகரனுக்கு வணக்கம் செலுத்துவோ, அவரை பார்த்து சிரிக்கவோ, தலையாட்டுவதோ கூடாது என எடப்பாடி மற்றும் பன்னீர் தரப்பு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
இந்நிலையில் இந்த கேள்வியை பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்று தினகரன் ஆதரவு நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத்திடம் முன்வைத்தது. இதற்கு பதில் அளித்த அவர் தினகரன் வரும் போது அவர்கள் எழுந்து நிற்பார்கள் என்றார்.
 
இப்படித்தான் அன்றைக்கு கவுரவர்கள் சபைக்கு கண்ணன் வந்தான். கவுரவர்கள் சபைக்கு உள்ளே கண்ணன் வருகிறபோது யாரும் எழுந்திருக்கக் கூடாது என்று துரியோதனன் சொன்னான். ஆனால் கவுரவர்கள் சபைக்குள்ளே கண்ணன் வந்தபொழுது முதலில் எழுந்து நின்றவன் துரியோதனன். அதுதான் தமிழ்நாட்டில் நடக்கப்போகிறது என்றார் நாஞ்சில் சம்பத்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.8 கோடி மதிப்புடைய வோட்கா பாட்டில் கொள்ளை...