Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு என்றுதான் அழைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (14:58 IST)
கடந்த சில நாட்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் அழைத்து வருகின்றனர். அதேபோல் தமிழகம் என்று அழைக்காமல் தமிழ்நாடு என்றும் அழைத்து வருகின்றனர் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்தியா என்பது ஒன்றியங்கள் இணைந்த அரசு என்பதும் அதனால் ஒன்றிய அரசு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்றும் அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய அரசு என்றுதான் அழைக்க வேண்டுமென்றும் ஒன்றிய அரசு என்று அழைக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார் 
 
தற்போது ஒன்றிய அரசு என்று அழைப்பவர்கள் மத்திய அரசில் ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசு என்றுதான் அழைத்தார்கள் என்றும் அவர் நினைவுபடுத்தினார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் உள்பட பலரும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த கருத்துக்கு ஆதரவு கருத்துக்களும் எதிர்ப்பு கருத்துக்களும் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்குப்பிரிவு என்ன செய்கிறது? கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஐகோர்ட் கேள்வி..!

லேடீஸ் கம்பார்ட்மெண்ட் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபர்: அதிர்ச்சியில் கூச்சலிட்ட பெண்கள்

அம்பேத்கர் பெயரை சொன்னால் சொர்க்கம் செல்ல முடியாது.. அமித்ஷாவுக்கு ஆதவ் அர்ஜூனா கண்டனம்..!

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. ஆந்திரா நோக்கி நகர்கிறதா?

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.4 கோடி வரிவிதிப்பா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments