Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அது இ பாஸ் இல்ல… ஆல் பாஸ் – இணையத்தில் பரவும் மீம்ஸ்கள்!

Advertiesment
அது இ பாஸ் இல்ல… ஆல் பாஸ் – இணையத்தில் பரவும் மீம்ஸ்கள்!
, சனி, 15 ஆகஸ்ட் 2020 (09:37 IST)
தமிழகத்தில் இ பாஸ் சம்மந்தமாக பல்வேறு விவாதங்கள் நடந்துவரும் நிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாஸ் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்காததாலும், இ-பாஸ் பெற்று தர இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் அதிகரித்துள்ளதாலும் இ-பாஸ் நடைமுறைகளை நீக்கவோ அல்லது எளிமைப்படுத்தவோ வேண்டும் என மக்கள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தனர். இந்நிலையில் இ-பாஸ் நடைமுறைகளில் புதிய தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி ஆகஸ்டு 17 முதல் இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் அனுமதி வழங்கப்படும். இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது ஆதார் கார்டு எண், ரேசன் கார்டு எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை இணைத்தால் உடனடி இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
webdunia

ஆனால் முதல்வரின் இந்த அறிவிப்பு இணையத்தில் கேலி செய்யப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாஸ் கிடைக்கும் என்றால் எதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் பலரோ இ பாஸ் மூலமாக தனியார் ஏஜென்ஸிகள் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து பணம் சம்பாதிக்கவே இன்னமும் இ பாஸ் நடைமுறை நீக்கப்படாமல் உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வரின் அறிவிப்பை கேலி செய்யும் விதமாக பல மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக சாதனையாளர்களுக்கு அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகள்! – முதல்வர் வழங்கினார்!