நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த அன்னை சத்யா நகர் பகுதியில் வசித்து வந்தவர் கோகிலா. இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு செல்வதற்க்கா ஒரு அரசுப்பேருந்தில் ஏறினார்.
பேருந்தில் கூட்டமாக இருந்ததால் அவர் படிக்கட்டில் நின்றதாகத் தெரிகிறது. அப்பொது கோட்டை மேடு என்ற பகுதியில் வந்த போது சட்டென ஓட்டுநர் பேருந்தை வளைத்துள்ளார். இதில் உள்ளே பஸ் கம்பியைப் பிடித்திருந்தாலும் கூட பேருந்தின் வலிமைக்கு ஒன்றும் செய்யமுடியாமல் வெளியே சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
ஆனால், எந்த வாகனங்களும் வரவில்லை அதனால் கோகிலா சிறிய காயங்களுடம் தப்பித்தார். இந்தக் காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகின்றன.