Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இந்தவாட்டி துரைமுருகன் இல்லையா? ஸ்டாலினின் முடிவு!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:04 IST)
திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவில் இந்தமுறை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இருக்கமாட்டார் என சொல்லப்படுகிறது.

திமுகவின் தற்போதையை மூத்த தலைவர்களில் ஒருவராகவும் அக்கட்சியின் புதிய பொதுச் செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன். இவர் கலைஞருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். ஆனால் ஸ்டாலினோடு சில கருத்து மோதல்கள் எழுந்து பிறகு அவருக்குக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வழங்கிய பின்னர் சுமூகமாக அவர்களின் உறவு இருந்து வருகிறது.

இந்நிலையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைக்க உள்ளது. வழக்கமாக அந்த குழுவில் எப்போதும் இருக்கும் துரைமுருகன் இந்த முறை இருக்க மாட்டார் என சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பதால் அடுத்த கட்ட தலைவர்களுக்கு அந்த பொறுப்பை வழங்கலாம் என ஸ்டாலின் முடிவு செய்துள்ளதே என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments