தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இன்றும் சில பகுதிகளில் கனமழை தொடர்ந்து உள்ளதை அடுத்து சில பகுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை அதாவது நவம்பர் 15ஆம் தேதி விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்
மேலும் தமிழகத்தில் சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேலும் சில பகுதிகளில் நாளை பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.