தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம்.. சென்னைக்கு கனமழையா?

Mahendran
செவ்வாய், 25 நவம்பர் 2025 (13:15 IST)
தமிழகத்தில் ஒரே நேரத்தில்  குமரிக்கடல் மற்றும் அந்தமானுக்கு கிழக்கே என இருவேறு காற்றழுத்த அமைப்புகள் உருவாகியுள்ளன.
 
முதலில் உருவான குமரிக்கடல்  காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. எனினும், இது புயலாக மாறாது என்றும், இன்று முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில்  இரண்டாவது காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதுவும் புயலாக மாறாமல் கடலிலேயே கரையும் வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
இரண்டு காற்றழுத்த தாழ்வு நகர்வால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நவம்பர் 29 அன்று சென்னை, காஞ்சிபுரம் உட்பட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுவடைவதை பொறுத்து, அது புயல் சின்னமாக வலுப்பெறுமா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதவ், புஸ்ஸி ஆனந்திடம் சராமரி கேள்விகள்!.. 10 மணி நேரம் சிபிஐ அலுவலகத்தில் நடந்தது என்ன?..

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு 160 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இஸ்ரேல் பிரதமரின் இந்திய வருகை திடீர் ரத்து.. என்ன காரணம்?

குமரிக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

உங்க வீட்ல எல்லாரும் சினிமா!. கேக்குறவன் கேனையனா இருந்தா!.. விஜயை தாக்கிய கருணாஸ்!...

அடுத்த கட்டுரையில்
Show comments