Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரேசன் கடை பற்றி பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்-ராதா கிருஷ்ணன்

Advertiesment
ரேசன் கடை பற்றி பரவி வரும் வதந்திகளை   நம்ப வேண்டாம்-ராதா கிருஷ்ணன்
, வியாழன், 22 செப்டம்பர் 2022 (22:05 IST)
ரேசன் கடை பற்றி பரவி வரும் வதந்திகளை   நம்ப வேண்டாம் என கூட்டுறவுத் துறைச்செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. தமிழ் நாடு அரசு மக்களின் நலனுக்காகப் பல திட்டங்கள்< அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  மூன்று மாதங்கள் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால்  ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று ஒரு தகவல் வெளியானது.

இதனால், மக்கள் பதற்றம் அடைந்தனர். இந்த நிலையில், இதுகுறித்து, கூட்டுறவுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளதாவது: மூன்று மாதங்கள் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால்  ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து வசிப்பவர்களுக்கும் ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன்ம் ரேசன் கடைகளில்  சோப்பு, அரிசி மாவு மற்ற பொருட்களை வாங்க பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட தாய் உயிருடன் வந்ததால் பரபரப்பு