Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறந்தநாளை மறந்து பொதுமக்களுக்கு சேவை

பிறந்தநாளை மறந்து பொதுமக்களுக்கு சேவை
, திங்கள், 21 ஜூன் 2021 (14:09 IST)
பிறந்தநாளை மறந்து பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் பெண் டாக்டர் சக பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம். 

 
கரூர் கஸ்தூரி பாய் தாய் சேய் நல மையத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் அங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் கூட்டம் அதிகளவில் வருவதால் அவற்றை தடுக்கும் விதமாக அருகில் உள்ள கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்து முகாம் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
 
இதில் மருத்துவராக பணியாற்றி வருபவர் திவ்யா. இளம் மருத்துவரான இவர் காலை 6.30 மணிக்கு பணிக்கு வரும் அவர், கூட்டமாக வரும் பொதுமக்களை வரிசையில் ஒழுங்கு படுத்துவது முதல் அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் அளித்தும், தடுப்பூசியின் நன்மை குறித்து எடுத்துரைத்து தனது தலைமையிலான குழுவினருடன் தடுப்பூசி செலுத்தி வருகிறார். நாளொன்றுக்கு 200 டோஸ்கள் முதல் 1400 டோஸ்கள் வரை செலுத்தப்பட்ட நிலையிலும் கடைசி நபர்களுக்கு வரை நின்று பணிகளை செய்த மருத்துவர் திவ்யாவிற்கு இன்று பிறந்த நாள் என்பதை உணர்ந்த சக மருத்துவ பணியாளர்களும், தன்னார்வளர்கள், காவலர்கள், போலீஸ் பாய்ஸ் ஆகியோர் ஒன்றிணைந்து அவருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். 
 
தனக்கு இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது மறக்க முடியாத பிறந்த நாளாக அமைந்து விட்டது என்றார். பொதுமக்கள் யாரும் இல்லாத நிலையில் மருத்துவ முகாமில் இருந்த மருத்துவ பணியாளர் குழுவினர் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் உண்டு மகிந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்முறையாக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டது பெருமை: உதயநிதி