Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20 தொகுதிக்கும் உடனே இடைத்தேர்தல்: ஸ்டாலின் அவசரம்!

20 தொகுதிக்கும் உடனே இடைத்தேர்தல்: ஸ்டாலின் அவசரம்!
, வியாழன், 25 அக்டோபர் 2018 (12:27 IST)
கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமியின் ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். அதனால் அதிமுக கொறடா உத்தரவில் சபாநாயகர் அந்த 18 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்தார். 
 
இன்று வழங்கிய தீர்ப்பில் சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை எனக் கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனுவையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த 18 பேரின் எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை இழந்துள்ளனர். 
 
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று வெளியான தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் சட்டமனற உறுப்பினர்கள் இல்லாத தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், திமுகவை பொறுத்தவரை ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒரே கொள்கை. மற்றபடி எதை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. 
 
மக்கள் திமுகவுக்கு என்றுமே ஆதரவு தர காத்து கொண்டிருக்கிறார்கள். எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
 
எனவே, 20 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தை நான் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீர்ப்பு சாதகமாக வந்தாலும் எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல்தான் - ஏன் தெரியுமா?