18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவு செல்லும் என 3வது நீதிபதி தீர்ப்பளித்துவிட்டது தினகரன் தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சத்தியநாராயணன், சபாநாயகரின் முடிவில் தவறு இல்லை மற்றும் தகுதி நீக்கம் சட்டவிரோதமானது அல்ல எனக்கூறிய அவர், 18 எம்.ஏல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார். மேலும், 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை தினகரன் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தது. குறிப்பாக, தீர்ப்பு கண்டிப்பாக தங்களுக்கு சாதகமாகவே வரும் என நம்பியிருந்தது. பல செய்தியாளர்கள் சந்திப்புகள், தீர்ப்பு வரட்டும்.. அதன் பின் அனைத்தும் மாறும் என தினகரனும், தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏவும் தொடர்ந்து கூறி வந்தனர்.
மேலும், சமீபதில் குற்றாலம் சென்று தங்கியிருந்த அவர்கள், பாபநாசம், தாமிரபரணி ஆகிய இடங்களுக்கு சென்று பிரார்த்தனைகள் செய்தனர்.
ஆனால், தற்போது தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்துவிட்டதால் அவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் தலைமையான தினகரனுக்கு இந்த தீர்ப்பு கடும் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது.