Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட்டை எதிர்த்துப் போராட்டம் நடத்த திமுகவுக்குத் தகுதியில்லை - ஜெயக்குமார்

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (15:26 IST)
‘அதிமுக மாநாடு நடக்கவுள்ளதால், இது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஆகஸ்ட் 20 ஆம் தேதி  நீட் எதிர்ப்பு போராட்டத்தை திமுக அறிவித்துள்ளது’ என்று விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். அவர், பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின்னர் மதுரையில் வரும் 20 ஆம்  தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது.  பிரமாண்டமாக  நடைபெறும் இந்த  மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதையொட்டி,  கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் ஜெயிலர் காலை காட்சியை மொத்தமாக முன் பதிவு செய்த அமைச்சர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அந்த டிக்கெட்டுகளை ரஜினி ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கினார்.

இந்த நிலையில்,    நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், தமிழக ஆளுநரையும் கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவுள்ளதாக திமுக  இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீட்டை எதிர்த்துப் போராட்டம் நடத்த திமுகவுக்குத் தகுதியில்லை. வரும் 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடக்கவுள்ளதால், இது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அதேதேதியில் நீட் எதிர்ப்பு போராட்டத்தை திமுக அறிவித்துள்ளது என்று விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments