ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை தற்போது உயிரிழந்துவிட்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென என்ற காலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை தற்போது உயிரிழந்துவிட்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், அன்புக் குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையையும் தெரிவித்துக் கொள்கிறேன்,இந்த துயர நிகழ்விற்கு என் கடுமையான கண்டனங்கள்
மேலும் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அக்குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்பினையும் வழங்க வேண்டுமென வலியுறுத்ததுகிறேன்.
அலட்சியம் அக்கறையின்மைக்கு உதாரணமாக இருக்கும் இந்த விடியா ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பதையும், மக்களை காக்கும் கடமையில் இருந்து இந்த அரசு ஒவ்வொரு நாளும் தவறிச் செல்வதையும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிருபணம் செய்கிறது.என்று தெரிவித்துள்ளார்.