Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் யார்? வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (07:32 IST)
திமுகவில் புதிய பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு நாளை காலை 10 மணி முதல் 4 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு அறிவித்துள்ளது
 
தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்பப் பெற ஐந்தாம் தேதி கடைசி நாள் என்றும் திமுக அறிவித்துள்ளது
 
திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகன் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் காலமானார். இதனை அடுத்து அவர் வகித்து வந்த பதவி காலியானால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக துரைமுருகன் தாம் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார் 
 
ஆனால் கொரோனா தொற்று காரணமாக பொதுச் செயலாளர் தேர்வு தடைபட்டது. இந்த நிலையில் வரும் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடுவதாகவும் அதில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே சமயம் பொருளாளர் பதவிக்கு 3 பேர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆ.ராசா, எ.வ.வேலு மற்றும் டிஆர் பாலு ஆகியோர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் இதில் ஆ.ராசா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments