Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கரூர் மாவட்டத்தினை அறிவிக்க கோரி பா.ம.க வினர் மனு...

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கரூர் மாவட்டத்தினை அறிவிக்க கோரி பா.ம.க வினர்  மனு...
, செவ்வாய், 10 மார்ச் 2020 (22:02 IST)
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கரூர் மாவட்டத்தினை அறிவிக்க கோரி பா.ம.க வினர் மனு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கரூர் மாவட்டத்தினை அறிவிக்க கோரி பா.ம.க வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 
 
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட உதவி ஆட்சியர் மீனாட்சி தலைமையில் நடைபெற்றது. இதில், கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மனு ஒன்றினை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் கொடுக்கப்பட்டது. இதில், சேலம் தலைவாசலில் நடைபெற்ற கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டுவிழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்தினையும், எங்களது அரசு அனுமதிக்காது என்றும், குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரப்படாது என்றும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்றார். 
 
இதற்கு கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்வதாகவும், ஆனால் அதே நேரத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டத்தினை இணைத்த இந்த அரசு, காவிரி டெல்டாவில் மிக முக்கிய பங்கு வகிப்பது கரூர் மாவட்டம் தான், ஆனால் கரூர் மாவட்டத்தினை அறிவிக்காதது ஏன் ? என்றும், கரூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு மேல், காவிரி பாசன நஞ்சை விளைநிலங்கள் இருக்கின்றது, அதிலும் குறிப்பாக க.பரமத்தி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட ஒன்றியங்களை சார்ந்த பல ஊர்கள் இந்த காவிரி டெல்டா பகுதிகளில் வருவதாகவும், ஆகவே, கரூர் மாவட்டத்தினை காவிரி டெல்டா பாசனத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற கோரி தமிழக அரசு அறிவிக்க கரூர் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசிடம் எடுத்து கூற வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தினை எடுக்காமல், பாதுகாக்கப்பட்ட மண்டலமாக்க பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் & பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுவின் கோரிக்கையினை முன்வைத்து அதன்படி தமிழக அரசு அறிவித்ததற்கு அரசிற்கு நன்றி தெரிவித்ததோடு, கரூர் மாவட்டத்தினையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் திரெளபதி 2 வெளிவரும் கரூரில் திரெளபதி திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு