திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மாற்றப்படுகிறரா? புதிய பொதுச்செயலாளர் யார்?

Siva
புதன், 25 ஜூன் 2025 (11:18 IST)
திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் மாற்றப்பட இருக்கிறார் என்றும், புதிய பொதுச்செயலாளராக டி.ஆர். பாலு தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்றும் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருவது, திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடந்த பொதுக்குழுவின் போதே பொதுச்செயலாளர் மாற்றப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது சில சந்திப்புகள் அந்த தகவலை வலுப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
 
மேலிடத்திற்கு நெருக்கமான ஒருவர் துரைமுருகனிடம், "நீங்கள் ஆக்டிவாக இல்லை, அதனால்தான் பொதுச்செயலாளர் பதவி மாற்றப்பட இருப்பதாக பேச்சு அடிபடுகிறது," என்று சொல்ல, அதற்கு துரைமுருகன் காட்டமாக, "நான் சுறுசுறுப்பாக இல்லை என்று நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா?" என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும், திமுக நடத்தும் சில நிகழ்ச்சிகளுக்கு தனக்கு அழைப்பு இல்லை என்றும், பொதுச்செயலாளர் இல்லாமலேயே எப்படி திமுக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என்றும் அவர் எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இந்த நிலையில், திமுகவின் முக்கிய பிரமுகர்களே துரைமுருகனிடம் பதவியில் இருந்து விலகுமாறு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவது, துரைமுருகன் வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments