விஜயகாந்த் உடல்நலம்: தேமுதிக அறிக்கை

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (07:38 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் குணமாகி டிஸ்சார்ஜ் ஆனார்கள் என்ற செய்தியைப் பார்த்தோம் 
 
இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் விஜயகாந்த் அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி தேமுதிக தொண்டர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் இது ஒரு வழக்கமான பரிசோதனை என்றும் விஜயகாந்த் உடல்நலம் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தேமுதிக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது 
 
இது குறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். கேப்டனின் உடல்நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடுத்தே தேமுதிக தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments