Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திவாகரனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தான் இப்படி உளறுகிறார் - தினகரன் அதிரடி

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (07:49 IST)
திவாகரனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தான் இப்படி தேவையில்லாமல் உளறிக்கொண்டிருக்கிறார் என தினகரன் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக பல துண்டுகளாக பிரிந்தது. தற்பொழுது சசிகலா குடும்பத்தினர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
 
குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக திடீரென தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சசிகலா சிறை சென்றதற்கே தினகரன் தான் காரணம் என திவாகரன் குற்றம் சாட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தாலும் தெரிவிப்பேனே தவிர தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், உறவினர் என்ற முறையில் திவாகரன் மீது பாசம் உள்ளது, அவர் என் உறவினர் என்பதால் அவர் பேசுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மேலும் திவாகரனுக்கு கடந்த 2002-ம் ஆண்டு முதல் உடல்நிலை சரியில்லாததால் இப்படி தேவையில்லாமல் உளறிக்கொண்டிருக்கிறார். மன்னார்குடி வட்டாரத்தில் திவாகரனைப் பற்றி விசாரித்தாலே அவருடைய லட்சணம் தெரியும் என தினகரன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments