Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திவாகரனை அதிமுக வில் சேர்க்க மாட்டோம் - ஜெயக்குமார் தடாலடி

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2018 (12:38 IST)
தினகரன் - திவாகரன் இடையே ஏற்பட்ட மோதலில், நாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் திவாகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு இட, அதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் எதிர்வினையாற்ற தினகரன் - திவாகரனுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை பெறாமல் அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார்.

சசிகலா சிறைக்கு சென்றதற்கே தினகரன்தான் காரணம். அவரின் முதல்வர் ஆசைதான் அனைத்து பிரச்சனைகளையும் கொண்டு வந்தது. தினகரனை ஆதரித்ததற்காக அதிமுகவினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பேனே தவிர இனி தினகரனை ஆதரிக்க மாட்டேன் எனவும் திவாகரன் தெரிவித்துள்ளார்.
அந்த குற்றச்சாட்டு குறித்து பதில் கூறிய தினகரன் “திவாகரனின் புகார்களுக்கு பதில் கூற விருப்பமில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் எங்களை வெறுத்தாலும் நாங்கள் அவரை நேசிக்கிறோம்” எனக் கூறினார்.
 
இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் திவாகரனின் அதிமுக ஆதரவு பற்றி கேட்டனர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், இனி எக்காரணத்தைக் கொண்டும் சசிகலா குடும்பத்தினரை(திவாகரன்) அதிமுக வில் சேர்க்க மாட்டோம் என தடாலடியாக பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments