Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பதவிக்காக எடப்பாடி என்ன வேண்டுமானாலும் செய்வார்? - செந்தில் பாலாஜி (வீடியோ)

Advertiesment
பதவிக்காக எடப்பாடி என்ன வேண்டுமானாலும் செய்வார்? - செந்தில் பாலாஜி (வீடியோ)
, வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (10:39 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்ததோடு, டி.டி.வி தினகரனின் குடும்பத்தையும் இயக்கி வந்தது தற்போது வெளியே வந்துள்ளது பூனைக்குட்டி வெளியில் வந்துள்ளது என கரூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

 
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்த நிகழ்ச்சிகளுக்கு சென்று உறுப்பினர்களை தீவிரப்படுத்த வேண்டுமென்றும், கட்சி நிர்வாகிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, கட்சி நிர்வாகிகளுடன் புகைப்படங்களை எடுத்து வரும் செந்தில் பாலா,ஜி 26ம் தேதி மாலை கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள செங்குந்த முதலியார் திருமண மண்டபத்தில் கரூர் வடக்கு நகர நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
 
“சென்னை உயர்நீதிமன்றம் குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு விட்டுள்ளது. ஆகவே, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சி.பி.ஐ விசாரணைக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு முன்னர் அவர் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரை உடனே அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், இதில் இரண்டில் ஒன்று எதாவது உடனடியாக நடைபெற வேண்டும்.
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக மத்திய அரசிடம் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்து வந்தார். இந்நிலையில், டி.டி.வி தினகரனின் குடும்பத்தாரையும் இயக்கி வந்தது திவாகரனின் பேச்சை வைத்தே தெரியவந்துள்ளது. ஆகவே, இவ்வளவு நாட்கள்., வெளியே தெரியாத திவாகரனின் செயல்பாடுகள் தற்போது வெளியே தெரியவந்துள்ளது என்றதோடு, பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்கா விவகாரம் - டி.ஜி,பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தி.மு.க.வினர் கைது