Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை அணியின் வெற்றி தொடருமா? மும்பையுடன் இன்று மோதல்

Advertiesment
சென்னை அணியின் வெற்றி தொடருமா? மும்பையுடன் இன்று மோதல்
, சனி, 28 ஏப்ரல் 2018 (12:00 IST)
சென்னை- மும்பை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி மகாராஷ்டிரா மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் சென்னை அணியின் வெற்றி தொடருமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 
 
11-வது ஐபிஎல் தொடரின் 27-வது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
இரு அணிகளுக்கும் இது ஏழாவது போட்டியாகும், சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது. மும்பை அணி 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
webdunia
 
இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று தனது 4-வது தொடர் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் உள்ளது. அதேபோல் மும்பை அணி சென்னை அணியிடம் ஏற்கனவே தோற்றதற்கு பழி தீர்க்கும் ஆர்வத்துடன் உள்ளது. எனவே இந்த போட்டி ரசிகர்களுக்கு விடுமுறை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் விஸ்வரூபம்: 219 ரன்கள் எடுத்த டெல்லி அணி