Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 கட்சிகளின் ஓட்டுக்களை கூட்டினால் கூட தினகரனை நெருங்க முடியலையே!

Advertiesment
4 கட்சிகளின் ஓட்டுக்களை கூட்டினால் கூட தினகரனை நெருங்க முடியலையே!
, திங்கள், 25 டிசம்பர் 2017 (07:11 IST)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று கடைசி நேரத்தில் கணிக்கப்பட்டதுதான். ஆனால் இந்த அளவுக்கு இமாலய வெற்றி பெறுவோம் என்று தினகரன் தரப்பினர்கள் கூட எதிர்பார்க்கவில்லை

ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனன், கிட்டத்தட்ட தினகரன் பெற்ற வாக்குகளில் பாதியைத்தான் பெற்றுள்ளார். திமுகவோ டெபாசிட் இழந்துவிட்டது. வழக்கம் போல் எதிர்பார்த்தபடியே நாம் தமிழர் மற்றும் பாஜக கட்சிகள் 4 இலக்க எண்ணிக்கையில் ஓட்டுக்களை பெற்று தேறாத கட்சிகள் என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய நான்கு கட்சிகள் பெற்ற மொத்த ஓட்டுக்கள் 78,233 மட்டுமே. ஆனால் சுயேட்சை வேட்பாளர் தினகரன் மட்டுமே பெற்ற ஓட்டுக்கள் 89,013, இது நான்கு கட்சி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்களை விட 10,780 கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு கட்சிகளின் மொத்த ஓட்டுக்களே தினகரன் பெற்ற ஓட்டுக்களை நெருங்க முடியவில்லை என்பது தமிழகத்திற்கு ஏதோ தெரிவிக்கப்படுவதாகவே கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ருத்ரதாண்டவம் ஆடிய 'டெம்பின்' புயல்: இதுவரை 200 பேர் பலி