Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டீசல் பேருந்துகள் CNG பேருந்துகளாக மாற்றம்! - போக்குவரத்துக் கழகம் எடுத்த முடிவு!

Advertiesment
டீசல் பேருந்துகள் CNG பேருந்துகளாக மாற்றம்! - போக்குவரத்துக் கழகம் எடுத்த முடிவு!

Prasanth Karthick

, திங்கள், 3 மார்ச் 2025 (09:04 IST)

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை டீசலில் இருந்து சிஎன்ஜிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் உள்ளூர், வெளி மாவட்டங்கள் என பல வழித்தடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் டீசல் எரிப்பொருளில் இயங்கி வரும் நிலையில், எரிப்பொருள் தட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக பேருந்துகளை CNG கேஸ் எரிபொருள் முறைக்க மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

முதற்கட்டமாக இதற்காக தமிழ்நாடு முழுவதும் 1000 பேருந்துகள் சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் 8 லட்சம் கி,மீக்கு குறைவாக இயக்கப்பட்டவையாகவோ அல்லது 6-7 ஆண்டுகளுக்கு வாங்கப்பட்ட பேருந்துகளாகவோ இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.70 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகன் பதவியை பறித்து அப்பாவுக்கு பதவி கொடுத்த மாயாவதி.. உபியில் பரபரப்பு..!