Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயைக் கொன்ற கொடூரன் தஷ்வந்த் கொல்கத்தாவில் தஞ்சம்?

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (13:22 IST)
சிறுமி ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி தஷ்வந்திற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளான். தனிப்படை அமைத்து போலீசார் அவனை தேடி வருகின்றனர்.
மாங்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினியை அதே அடுக்குமாடியில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றான். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
 
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்தின் தந்தை மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும் அவனுக்கு ஜாமீனும் அளித்தது.
 
வெளியே வந்த தஷ்வந்த் தனது தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் அவனது தாயிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. உனக்கெல்லாம் பணம் தர முடியாது என தஷ்வந்த்தின் தாய் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொடூரன் தஷ்வந்த், தன்னை பெற்ற தாய் என்றும் பாராமல் இரும்புக் கம்பியால் தனது தாயை அடித்து கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றான்.
 
இது குறித்து அவனது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவன் கொல்கத்தாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேங்கைவயல் சம்பவம்.. இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவு! இதுதான் திராவிட மாடல்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!

2023 - 24ஆம் ஆண்டில் பாஜக, காங்கிரஸ், திமுக பெற்ற நன்கொடைகள் எத்தனை கோடி? ஆச்சரிய தகவல்..!

ஜனவரியிலும் மழை நீட்டிக்குமா? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

கைதான ஞானசேகரன், போனில் ’சார்’ என குறிப்பிட்டது யார்? போலீசார் தீவிர விசாரணை..!

நேர்மையின் ஊற்றுக்கண் நல்லகண்ணு அய்யா.. 100வது பிறந்தநாளில் விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்