Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாயைக் கொன்று இதயத்தை ருசி பார்த்த போதை ஆசாமி...

Advertiesment
தாயைக் கொன்று இதயத்தை ருசி பார்த்த போதை ஆசாமி...
, செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (16:29 IST)
மது போதையில் தனது தாயைக் கொன்று, அவரின் இதயத்தை வெளியே எடுத்து அதை சட்னியில் தொட்டு சாப்பிட்ட கொடூர நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருளே உள்ள டரராணி சவுக் எனும் இடத்தில் வசிப்பவர் சுனில் குசகர்ணி. அவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். குசகர்ணி குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனத் தெரிகிறது. இதனால், அவருடன் வாழப்பிடிக்காமல் அவரின் மனைவி அவரின் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.
 
இந்நிலையில், நேற்று மாலை அளவுக்கதிமாக மது அருந்திய சுனில் குசகர்ணி, பசியில் தனது உறவினர் சிலரிடம் உணவு கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து, தனது வீட்டிற்கு அந்த சுனில், தனது தாயாருடன் சண்டை போட்டுள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாயை அடித்துக் கொன்றார். அதோடு, அவரின் இதயத்தை அறுத்து ஒரு தட்டில் வைத்து, வீட்டிலிருந்த சட்னி மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றில் தொட்டு கொஞ்சம் சாப்பிட்டுள்ளார். 
 
அதன்பின் ரத்தக்கறையுன் வீட்டை விட்டு அவர் வெளியே வர, அவரைக்கண்டு அதிர்ச்சியைடந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  அதன்பின் போலீசார் நடத்திய விசாரணையில்தான் மேற்கண்ட தகவல்கள் வெளியே தெரியவந்துள்ளது.
 
இந்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சுனாமி? பீதியில் மும்பை நகர மக்கள்!!