பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Siva
ஞாயிறு, 7 டிசம்பர் 2025 (08:30 IST)
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தான் என்று முன்னர் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், பாமக தலைவராக அன்புமணி தொடர்ந்து நீடிக்க முடியாது என்று அறிவித்துள்ளது.
 
அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை, பாமகவின் நிறுவனரே தலைவராகவே   தொடர்வார் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "46 ஆண்டுகாலம் உழைத்து வளர்த்த பாமக-வை என்னிடமிருந்து பறிக்க செய்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டு, மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தருவேன் என்று அவர் உறுதி அளித்துள்ளார். "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
 
டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, அன்புமணி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என்று பாமக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments