ஐஸ்க்ரீமில் இருந்த தவளை.. மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..!
இறந்து போன தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட மூன்று குழந்தைகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு திருச்சியை சேர்ந்த இரண்டு தம்பதிகள் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்துள்ளனர். அப்போது தங்களுடைய குழந்தைகளுக்கு அவர்கள் கோயில் அருகே உள்ள கடையில் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளனர்.
அந்த ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை ஒன்றை பார்த்து குழந்தை ஒன்று தனது தந்தையிடம் கூறிய நிலையில் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஐஸ்கிரீம் சாப்பிட்ட மூன்று குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து குழந்தைகளின் தந்தைகள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்த கடையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது