தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை இலியானா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை இலியானா, இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் போக்கிரி படத்தின் மூலம் அறிமுகமானார்.  அதன்பின்னர், முன்னா, ஜெய்சா, கிக், சலீம், சக்தி,  உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
 
									
										
			        							
								
																	தமிழில் கேடி என்ற  திரைப்படம் மூலமாக  அறிமுகமான இலியானா, விஜய் – ஷங்கர் கூட்டணியில் உருவான நண்பன் படத்தில்  நடித்திருந்தார்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்திருந்த இலியானா  இன்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.
 
									
			                     
							
							
			        							
								
																	அவர் குணமடைய ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.