யூட்யூப் பிரபல டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத் பார் ஊழியரை தாக்கிய வழக்கில் தலைமறைவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூட்யூபில் சமையல் சேனல் நடத்தி அதன்மூலம் பெரும் புகழை அடைந்தவர் டாடி ஆறுமுகம். இவரது பெயரில் அவரது மகன் கோபிநாத் அரியலூரில் மூன்று இடங்கலில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கோபிநாத் தனது நண்பர்களுடன் புதுச்சேரி சென்று அங்குள்ள தனியார் பாரில் மது அருந்தியுள்ளார். பார் மூடும் நேரம் வந்தபோதும் கூட தொடர்ந்து மது வழங்குமாறு பாரில் பணிபுரிந்த ஜார்ஜஸ் சினாஸ் என்பவரை கோபிநாத் மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஆனால் ஊழியர் மறுத்த நிலையில் கோபிநாத் மற்றும் நண்பர்கள் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கியதுடன், பாரின் சேர், மேசை போன்றவற்றையும் உடைத்ததாக பார் ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கோபிநாத் தலைமறைவாகியுள்ளதாகவும், போலீஸார் அவரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.