Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நல்லெண்ணையின் அற்புத பயன்கள்

நல்லெண்ணையின் அற்புத பயன்கள்
, செவ்வாய், 23 நவம்பர் 2021 (00:59 IST)
நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
 
காலையில் எழுந்து பல் தேய்த்த பின்னர் 25 மி எண்ணெயை வாயில் ஊற்றி 10 நிமிடம் அப்படியே வாய்க்குள்ளேயே வைத்திருந்து பற்களுக்கிடையே நன்றாக படும்படி கொப்பளிக்க நுரைத்து வெண்மை நிறமாக மாறி இருக்கும் அப்போது அதை வெளியே கொப்பளித்து விடவேண்டும். இப்படி செய்வதால் தோல்  சம்பந்தப்பட்ட நோய்கள், அரிப்பு போன்றவை நீங்கிவிடும். உள் உறுப்புகள் பலம் அடையும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பல் வலி, ஈறு வீக்கம்,  தலை வலி சரி செய்யப்படும்.
 
நல்லெண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள் வரவிடாது. உடலில் வலி இடத்தில் நல்லெண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வலி நீங்கும்.
 
சிலருக்கு அதிக உஷ்ணத்தால் அடி வயிறு வலி, சிறுநீர் பிரிவதில் சிரமம் ஏற்படும். அவர்கள் அடி வயிற்றுப்பகுதியில் எண்ணெயை தேய்த்தால் நிவாரணம்  கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோம்பு தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்...!