இன்று மதியம், சென்னை அருகே புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை பணியாக 22,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், உணவு, குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளுடன் 323 நிவாரண மையங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நூற்றுக்கும் அதிகமான சமையல் கூடங்கள், படகுகள், ராட்சத மோட்டார்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், மறு அறுவை இயந்திரங்கள் மற்றும் ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்துடன், 835 பூங்காக்கள் மற்றும் கடற்படை பகுதிகள் இன்று மூடப்படும் என்றும், மழை நீர் தேங்குவதன் காரணமாக பரங்கிமலை, அரும்பாக்கம் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று செயல்படாது என்றும், பொதுமக்கள் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வதை இன்று தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.