Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்? தமிழ் இயக்குனரின் கிண்டல் பதிவு

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (20:32 IST)
’எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?
எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிட கொள்ள நீங்கள் யார் என தமிழ் இயக்குனர் ஒருவர் கிண்டலாக தனது வீட்டில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பாப் பாடகி ரிஹானா உள்பட பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் திடீரென கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் பொங்கி எழுந்து எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் இந்தியாவின் இறையாண்மையை நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் கூறியிருந்தனர்.
 
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணியில் குல்தீப்பை சேர்க்காதது அபத்தமான முடிவு என்றும் அவரை எப்போது அணியில் சேர்க்க போகிறார்கள்? என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்த கருத்துக்கு கிண்டலுடன் பதிவு செய்த ’தமிழ் படம்’ இயக்குனர் சி.எஸ்.அமுதன், எங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட நீங்கள் யார்? எங்கள் தேசத்தின் இறையாண்மையை ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்ய விடமாட்டோம்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments