Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘அருண்விஜய் 33’ படத்தில் இணைந்த மேலும் இரண்டு நடிகர்கள்!

‘அருண்விஜய் 33’ படத்தில் இணைந்த மேலும் இரண்டு நடிகர்கள்!
, வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (18:25 IST)
பிரபல நடிகர் அருண் விஜய் நடிக்க இருக்கும் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார் என்பதையும், இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறார் என்பதையும் பார்த்தோம்,. 
 
மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ராதிகா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவலும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அருண் விஜய்யின் 33வது படத்தில் மேலும் இரண்டு நடிகர்கள் இணைந்து உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவர் பிரபல குணசித்திர நடிகர் ராஜேஷ் மற்றும் பிரபல காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி ஆகியோராவர்.
 
நேற்று இந்த படத்தில் அம்மு அபிராமி இணைந்ததாக வந்த தகவலை அடுத்து இன்று மேலும் இருவரும் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகரிடம் அஜித் அப்டேட் கூறியது உண்மைதானா?