Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணைநோய் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் மரண்ம் அதிகம்… மருத்துவர்கள் சொல்லும் காரணம்!

Advertiesment
இணைநோய் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் மரண்ம் அதிகம்… மருத்துவர்கள் சொல்லும் காரணம்!
, வெள்ளி, 28 மே 2021 (12:27 IST)
தமிழகத்தில் கொரோனாவால் இறப்பவர்களில் எந்த இணைநோயும் இல்லாமல் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மிக மோசமாக இருக்கிறது. இதனால் முதல் அலையை விட பலமடங்கு அதிக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டும் இறந்தும் வருகின்றன. பொதுவான கொரோனா மரணங்களில் கொரோனா தொற்றோடு சேர்ந்து நாள் பட்ட இணைநோய்கள் கொண்டவர்களே இறந்து வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக எந்த இணைநோயும் இல்லாமல் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. நேற்று கூட 100 பேருக்கும் மேல் அவ்வாறு இறந்துள்ளனர்.

இந்நிலையில் அதற்கான காரணங்கள் என்ன என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. அதில் ‘நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறாதது, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாதது மற்றும் தகுந்த மருந்துகள் கிடைக்காதது’ ஆகியக் காரணங்களைக் கூறுகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருவாரத்தில் இந்தியாவில் 21 சதவீதம் கொரோனா பாதிப்பு குறைவு! WHO தகவல்!