Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் பங்களாவுல நீங்க தங்கிக்கோங்க.. எனக்கு குடிசையை குடுங்க! – சீமான் பதில்!

Webdunia
திங்கள், 9 மே 2022 (08:59 IST)
தொடர் மின்வெட்டு குறித்த சீமான் கருத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்த நிலையில் அதற்கு சீமான் மறுமொழி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தொடர் மின்வெட்டு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா..” என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்து பதிவிட்டிருந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி “கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்” என கூறினார்.

அதற்கு பதில்மொழி அளித்து பதிவிட்டுள்ள சீமான் “மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு! அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற 'குடிசையில' அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்!” என்று பேசியுள்ளார்.

இருவருக்கிடையேயான இந்த ட்விட்டர் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

பெங்களூரை அடுத்து குஜராத்திலும் பரவிய எச்.எம்.பி.வி. பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு;

அடுத்த கட்டுரையில்
Show comments