Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்குவது இழிவு! – சீமான் கருத்து!

Advertiesment
Tamilnadu
தருமபுர ஆதீனம் பல்லக்கு தூக்கும் விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தருமபுர ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்ச்சி மே 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்று ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “இதை பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனிதனை மனிதனே சுமப்பது இழிவானது. அந்த காலங்களில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் பல்லக்கில் தூக்கினார்கள். இப்போது பல வகை வாகனங்கள், ஊர்திகள் இருக்கின்றன. பல்லக்கு தூக்குவதை தவிர்த்து திருவிழா கொண்டாடுவதை நாங்கள் ஏற்கிறோம். மதுரை ஆதீனமும், குன்றக்குடி ஆதீனமும் பல்லக்கில் போகிறார்களா, போவார்களா?” என்று பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது: ஆப்கன் தாலிபான் அரசு உத்தரவு