தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்! 7 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்! - அடுத்தடுத்து அதிரடி!

Prasanth Karthick
வெள்ளி, 7 மார்ச் 2025 (14:57 IST)

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து திமுக பேசி வரும் நிலையில் அடுத்தக்கட்டமாக 7 மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

மத்திய அரசு அடுத்த ஆண்டில் இந்தியா முழுவதும் தொகுதி மறுசீரமைப்பு செய்ய உள்ள நிலையில், இதனால் மக்கள்தொகை அதிகம் உள்ள வட மாநிலங்களில் தொகுதிகள் அதிகமாகவும், தென் மாநிலங்களில் தொகுதிகள் குறைவாகவும் மாறும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய திமுக இதுத்தொடர்பாக தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

பினராயி விஜயன், நவீன் பட்நாயக், சித்தராமையா, மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, பகவந்த்மான் சிங் உள்ளிட்டோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து தொடர் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து 22ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments