Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்திரவாதி கூறிய பரிகாரம்.. 5 வயது சிறுமியை பலி கொடுத்த தம்பதி கைது..!

Mahendran
வெள்ளி, 7 மார்ச் 2025 (14:30 IST)
கோவாவில், ஒரு மந்திரவாதி கூறிய பரிகாரத்தின் பேரில், ஐந்து வயது சிறுமியை  கொலை செய்து ப்லி கொடுத்த தம்பதிகள் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கோவாவை சேர்ந்த பாபாசாகே அலார் என்பவர், தனது மனைவியுடன் பூஜாவுடன் சேர்ந்து ஒரு மந்திரவாதியிடம் தங்கள் துயரை போக்க வழி கேட்டுள்ளனர். மந்திரவாதி, சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
 
இதையடுத்து, அந்த தம்பதிகள் வசிக்கும் இடத்திற்கு அருகே, திடீரென ஐந்து வயது சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. வீட்டின் வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் பரிசோதித்த போது, பாபாசாகே அலார் மற்றும் அவரது மனைவி பூஜா சிறுமியுடன் வீட்டை விட்டு வெளியே சென்றது தெரிய வந்தது.
 
அதன் பின்னர், அந்த தம்பதிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, "சிறுமியை பலியிட்டால் தங்களுடைய துயர பிரச்சனைக்கு தீர்வு காணலாம்" என மந்திரவாதி கூறியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். தங்கள் பிரச்சனைகள் தீர்வதற்காக, சிறுமியின் உடலை வீட்டின் பின்புறத்தில் பலியிட்டு புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
 
இதையடுத்து, அந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எலான் மஸ்க் இந்தியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிது அல்ல: பிரபல தொழிலதிபர்..!

நீங்க நல்லவரா? கெட்டவரா? 90 மணி நேரம் வேலை..? மாதவிடாய் காலங்களில் விடுமுறை! - L&T நிறுவனர் சுப்ரமணியன் அறிவிப்பு!

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து.. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ..!

தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ..!

அமித்ஷா என நினைத்து சந்தானபாரதிக்கு போஸ்டர் அடித்த பாஜக!? - போஸ்டரால் கலகல!

அடுத்த கட்டுரையில்
Show comments