கோவை மாவட்டம் உக்கடத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் கார் வெடித்தது தொடர்பான வழக்கில் சிலரைக் கைது செய்த நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி கோவை, சென்னை உள்ளிட்ட 43 இடங்களில் சிபி ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், சிலர் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத்தகவல் வெளியானது.மேலும், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டுகள் வாங்கிக் கொடுத்து, அதற்காகப் பணம் பேற்றதாகவும், இது தொடர்பாக 18 நபர்கள் கொண்ட பட்டியலை தமிழக காவல்துறைக்கு அனுப்பியது.
இதையடுத்து கடந்த 14 ஆம் தேதியும் சிலரது வீடுகளில் போலீஸார் சோதனை நடத்திய நிலையில், இன்று மீண்டும் சென்னையில் உள்ள 4 நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.