Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெ. நினைவிடம் கட்டும் பணி : சி.எம்.டி.ஏ அனுமதி

Advertiesment
ஜெ. நினைவிடம் கட்டும் பணி : சி.எம்.டி.ஏ அனுமதி
, சனி, 31 மார்ச் 2018 (15:33 IST)
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ அனுமதி அளித்துள்ளது.

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அதன் பின் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.  அதன் பின் ரூ.50.08 கோடி செலவில் அவருக்கு அங்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.
 
எனவே, இந்த பணிக்கு அரசு தரப்பில் டெண்டர் விடப்பட்டது. அதில், குறைந்த விலைக்கு டெண்டர் கோரிய ஒரு தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  ஜெ. நினைவிடம் குறித்த வரைபடம் மற்றும் ஸ்டெக்சுரல் வடிவமைப்புகள் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழமத்திடம் சமர்பிக்கப்பட்டது. 
 
அதை பரிசீலித்த அதிகாரிகள் அதற்கான ஒப்புதலை வழங்கி விட்டனர். எனவே, ஜெ.வின் நினைவிடம் கட்டும் பணி விரைவில்  தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் தொல்லை: மோதிக்கொள்ளும் நடிகைகள்