Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருக்கு உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டா? சென்னை ஐகோர்ட் அதிரடி

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (11:30 IST)
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கடந்த சில நாட்களாக போராட்டம் வலுத்து வரும் நிலையில் அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் திடீரென கலந்து கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

 
இந்த நிலையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பதவிப் பிரமாணம், ரகசியக்காப்பு பிரமாணத்தை மீறி உண்ணாவிரதம் இருப்பதாக சென்னை பெரம்பூரை சேர்ந்த தேவராஜ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள சென்னை ஐகோர்ட், ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட அனைவருக்கும் உண்ணாவிரதம் இருக்க உரிமை உள்ளது என்றும், அவர்கள் முதல்வர், துணை முதல்வராக இருந்தாலும் அவர்களும் இந்திய பிரஜை என்றும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments