Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

50 நிமிடத்தில் சென்னை-சேலம்: விமான சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர்

Advertiesment
50 நிமிடத்தில் சென்னை-சேலம்: விமான சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர்
, ஞாயிறு, 25 மார்ச் 2018 (10:56 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்று முன்னர் சேலத்தில் விமான சேவையை தொடங்கி வைத்தார். சேலம் டு சென்னைக்கு முதல் விமானம் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பவுள்ளது. இந்த இரு நகரங்களுக்கு இடையிலான பயண தூரம் வெறும் 50 நிமிடங்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமான சேவை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியபோது, 'சேலம் வளர்ந்து வரும் ஒரு மாநகரம். அதுமட்டுமின்றி இந்த நகரத்தை சுற்றியும் ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு என ஈரோடு வரை தொழில்நகரங்கள் அதிகம் உள்ளது. தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக விமான சேவை தேவை. அந்த வகையில் சேலத்தில் தற்போது விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தை அடுத்து தஞ்சாவூர் உள்பட இன்னும் சில நகரங்களில் விமான சேவை தொடங்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

webdunia
இன்று நடைபெற்ற விமான சேவை தொடக்கவிழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் பேசிய பொன்ராதாகிருஷ்ணன், 'சேலத்தில் இருந்து இரவு நேரங்களிலும் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகத்திற்கு போக்குவரத்து திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் நலக் குறைவால் அதிமுக அவைத் தலைவர் மனுசூதனன் மருத்துவமனையில் அனுமதி