Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாலையில் விழுந்து காயமடைந்தவருக்கு உதவிய முதல்வர் ஸ்டாலின்

stalin
, வெள்ளி, 21 அக்டோபர் 2022 (15:17 IST)
சென்னையில் முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில்  விழுந்து  ஒரு   நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டதை கண்டு  கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று காயமடைந்தவரை உடனடியாக ஆட்டோ ஒன்றில், சிகிச்சை  மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இன்று, மாண்புமிகு முதலமைச்சர்  அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது சென்னை, அண்ணா சாலை, டி.எம்.எஸ் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த  சூளைமேட்டைச் சேர்ந்த திரு.அருள்ராஜ் என்பவர்  சாலையில் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது.

இதைக் கண்ட முதல்வர் ஸ்டாலின் தமது  கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று காயமடைந்தவரை உடனடியாக ஆட்டோ ஒன்றில், சிகிச்சை  மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: சீமான் வலியுறுத்தல்