தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழ் நாட்டு வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் கலவரவம் வெடித்தது. இதில், அப்பாவி மக்கள் 13 பேர் தூப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக இன்று சட்டசபையில் கூறிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேர் குடும்பங்களுக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி சூடு சம்பவம் தமிழ் நாடு வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. அதிமுக அரசு போராட்டத்தைச் சரியாக கையாளவில்லை.துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று அருணா ஜெனதீசன் ஆணையம் உறுதி செய்துள்ளது. தொலைக்காட்சியைப் பார்த்துதான் சம்பவத்தை தெரிந்துகொண்டேன் என எடப்பாடி பழனிசாமி கூறியது, உள்துறை அமைச்சகத்தை கையில்வைத்திருக்கும் முதல்வர் பேசும் பேச்சா என நாடே கேள்வி எழுப்பியது என்றும், அவரது ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையம்தான் இந்த உண்மைகளை வெளியே கொண்டுவந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.