Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

asisan Paralympics
, திங்கள், 23 அக்டோபர் 2023 (12:46 IST)
சீன நாட்டில் ஹாங்சோ நகரில் தற்போது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 தற்போது நடந்து வருகிறது.

இப்போட்டியில், டி47 உயரம் தாண்டுததல் பிரிவில் இந்திய வீரர் நிசாத் குமார் தங்கம் வென்றுள்ளார். இப்பிரிவில் 2.02 உயரம் தாண்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அதேபோ ஆசியன் பாரா விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் டி பிரிவில்  தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு  வெளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் தன் வலைதள பக்கத்தில் அவருக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

அதில், ''ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 – உயரம் தாண்டுதல் டி-63 பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள  நமது தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்த்த பாராட்டுகள்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 பெண் பத்திரிகையாளா்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!