டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்சுக்கு 2 வது குழந்தை பிறந்துள்ளது.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் செரீனா வில்லியம்ஸ். டென்னிஸ் விளையாட்டு உலகின் நம்பர் 1 நட்சத்திர வீராங்கனையாக ஜொலித்த அவர், கடந்த 2022 ஆம் ஆண்டு, டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார்.
இவரது கணவர் அலெக்சிஸ். இத்தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில், இத்தம்பதியர்க்கு 2 வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி செரீனா வில்லிம்ஸின் கணவர் அலெக்சிஸ் ஓஹானியர் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,' தங்களின் 2 வது பெண் குழந்தைக்கு ஆதிரா ரிவர் என்று பெயரிட்டுள்ளதாக' குறிப்பிட்டுள்ளார். இத்தம்பதியர்க்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.