Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒருவழியா அணையை திறந்தாச்சு: கொண்டாட காத்திருக்கும் விவசாயிகள்

Advertiesment
ஒருவழியா அணையை திறந்தாச்சு: கொண்டாட காத்திருக்கும் விவசாயிகள்
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (08:09 IST)
நீண்ட நெடுநாள் காத்திருப்புக்கு பிறகு இன்று மேட்டூர் அணை திறக்கப்பட இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கன மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 நாட்களில் 40 அடி உயர்ந்து 100 அடியாக மாறியிருக்கிறது. மேட்டூர் அணையின் கொள்ளளவு 120 அடி.

தற்போது போதுமான உயரத்தை எட்டிவிட்டதால் டெல்டா பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணை திறக்கப்படும் என தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று மேட்டூர் அணையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு மேட்டூர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு தண்ணீர் திறந்து விடப்படுவதால் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர் டெல்டா பகுதி மக்கள் இதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை: திமுக கருத்தால் அதிர்ச்சி