Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எப்படிதான் இந்த மக்கள் இப்படி வாழ்றாங்களோ!? – வீடியோவை பார்த்து கலங்கிய சேரன்!

Advertiesment
Bihar
, செவ்வாய், 28 ஜூலை 2020 (11:33 IST)
பீகாரில் உள்ள மருத்துவமனை ஒன்று குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் அதை பார்த்த இயக்குனர் சேரன் மனம் வருந்தி பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவலால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது. வட மாநிலங்களில் மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் மழை தண்ணீர் மருத்துவமனைகளுக்குள் புகுந்துள்ளது. கொரோனா நோயாளிகள் வார்டுகள் மழை நீர் சூழ்ந்திருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மழைநீர் உள்ளே வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. அதிலும் நோயாளிகள் பாதி வெள்ளத்தில் மூழ்கியபடி படுக்கைகளில் உள்ள வீடியோவை இயக்குனர் சேரன் பகிர்ந்துள்ளார். அதுகுறித்து பதிவிட்ட அவர் “எப்படிங்க இந்த மக்கள் இவ்வளவு சகிப்புத்தன்மையோட எதைப்பத்தியும் கவலை இல்லாம இருக்காங்கம்.. இவங்க மனசு முழுக்க நாம அடிமைகள்னு அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்களா...” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாதேவி மீது மேலும் இரண்டு பிரிவுகளில் வழக்கு: பரபரப்பு தகவல்