Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு மருத்துவமனையில் சேர 50 ரூபாய் லஞ்சம்! வைரலாகும் வீடியோ!

Advertiesment
அரசு மருத்துவமனையில் சேர 50 ரூபாய் லஞ்சம்! வைரலாகும் வீடியோ!
, திங்கள், 27 ஜூலை 2020 (07:24 IST)
தென்காசி அரசு மருத்துவமனையில் கொரோனா அச்சம் காரணமாக நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கும் உணவு டோக்கன் கொடுப்பதற்கும் லஞ்சம் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவலால் தமிழகமெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் மற்ற நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் உள்ளிட்டவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி அரசு மருத்துவமனையில் உள்ளவர்கள் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தென்காசி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுவதற்கும், உணவு டோக்கன் கொடுப்பதற்கும் 50 ரூபாய் லஞ்சம் வாங்குகிறார் அட்மிஷன் டோக்கன் போடுபவர். இதனை யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரேஷன் கடைகளில் இன்று முதல் இந்த பொருளும் இலவசம்!